வெசாக் பௌர்ணமியை முன்னிட்டு பௌத்த பக்திப் பாடல் நிகழ்ச்சி

மும்முறைப் புனித நிகழ்வுகளான (தெமகுல) பகவான் புத்தரின் பிறப்பு, ஞானோதயம் மற்றும் பரிநிர்வாணத்தை நினைவுகூர்ந்து கொண்டாடப்படும் வெசாக் பௌர்ணமியை முன்னிட்டு, 2025.05.16 அன்று வரகாபொல பிரதேச செயலாளர் திரு. ரங்கன சஜீவ அவர்களின் தலைமையில், வரகாபொல பிரதேச செயலகத்தின் “பரக்கும்” திறந்தவெளி அரங்கில் பௌத்த பக்திப் பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

பிரதேச செயலகத்தின் கலாசாரப் பிரிவின் ஏற்பாட்டிலும், ஏனைய அலுவலர்களின் ஒத்துழைப்புடனும் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கலாசார பேரவை, மூத்த பிரஜைகள் பேரவை, கிராம அபிவிருத்தி பேரவை, மங்கேதர மகிந்த ஞாயிறு பாடசாலை, பிரதேச செயலக அலுவலர்கள் மற்றும் சமுர்த்தி பிரிவு ஆகியவற்றின் பிரதிநிதிகள் பௌத்த பக்திப் பாடல்களை வழங்கினர்.

மேலும், இந்த பக்திப் பாடல் நிகழ்ச்சியுடன் இணைந்து, பிரிவு மட்ட அலுவலர்கள் மற்றும் கலாசாரப் பிரிவு இணைந்து கடலை மற்றும் காபி தானசாலையையும் நடாத்தினர்.

 

 

 

News & Events

22
ஜூன்2026
வெசாக் கூடு வடிவமைப்புப் போட்டி – 2026

வெசாக் கூடு வடிவமைப்புப் போட்டி – 2026

வெசாக் கூடு வடிவமைப்புப் போட்டி – 2026 புத்தபெருமானின்...

11
ஜூன்2026
உலக உயிரியல் பல்வகைமை தினம் – மே 22

உலக உயிரியல் பல்வகைமை தினம் – மே 22

உலக உயிரியல் பல்வகைமை தினம் – மே 22...

குடியுரிமை சாசனம்

Scroll To Top